அதிமுகவின் 50 ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் அவர்களே.. எங்களுடைய கட்சியை உடைக்கவும் முடியாது, பிரிக்கவும் முடியாது, முடக்கவும் முடியாது. உங்களது கட்சியை பத்திரமா பாத்துக்கோங்க.
திமுக கட்சியை பத்திரமா பாத்துக்க. ஏன்னா… நீங்க தான் பேசிட்டு இருக்கீங்க. நாங்க சொல்லல, நீங்கள் பொதுக்குழுவுல சொன்ன கருத்தை தான் நான் இங்கே சொல்றேன். ஆகவே உங்க கட்சி தேய்ந்து கொண்டிருக்கிறது. கட்சிக்குள்ளே உள் கட்சி பூசல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும்.
அப்போது பொழுது திமுக ஒரு பிரிவு, இரண்டு பிரிவு அல்ல. சின்னாபின்னமாகி, சீரழிந்து, தமிழகத்திலே தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியே இருக்காத நிலைமை ஏற்பட்டு விடும். ஏன்னா திறமை இல்லாத ஒரு கட்சித் தலைவர். திறமை இல்லாத ஒரு முதலமைச்சர். அதனால் அந்த கட்சி தேய்ந்து கொண்டிருக்கின்றது. எங்களை பார்த்து…
அண்ணா திமுகவை பார்த்து… இந்த கட்சியிலே பிளவு இருக்கின்றது என்று சொல்கிறாரே, உங்களுடைய கட்சியிலே பிளவு இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதனால் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுக்குழுவில் அப்படிப்பட்ட கருத்தை நீங்கள் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் என தெரிவித்தார்.