ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய நவம்பர் மாதம் 16ஆம் தேதி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற நவம்பர் மாதம் 15-ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற இருக்கும் நிலையில் கேரள தேவசம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் காணொலி காட்சி மூலம் இது பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொரோனாவை கருத்தில் வைத்து பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி கூட்டத்தின் முடிவில், மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட எண்ணிக்கையில் போதிய இடைவெளியுடனே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.