Categories
மாநில செய்திகள்

பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1743 கன அடி தண்ணீர் வரத்து…. வெளியான தகவல்….!!!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதும், குறைவதுமாக இருப்பதால் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி வினாடிக்கு 1743 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையின் மொத்த நீர்மட்டம் 104.5 அடியாக இருக்கிறது. இந்த அணையிலிருந்து பவானி வாய்க்கால் வழியாக 2200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அதன்படி தட்டன் பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீரும், குடிநீருக்காக பவானி ஆற்றில் 100 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் அணைக்கு  வரும் தண்ணீரை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |