தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை தற்போதைக்கு இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு நாடு முழுவதும் அமுலில் இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கல்லூரி படிப்புக்கான சேர்க்கை தற்போது தாமதமாக நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும் என பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்த ஒரு அறிவிப்பை தற்போது கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து தெரிவிக்கப்படும் எனவும், தனியார் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் விளம்பரப் பலகை வைத்தால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.