Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்…. பொங்கிய சி.வி சண்முகம்… வார்னிங் கொடுத்த எடப்பாடி..!!

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆனது நேற்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில்  ஓபிஎஸ் ஆதாரவாளர்கள் மற்றும் அதிமுகவில் இருந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து பேசப்பட்டு,  விவாதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டத்தில் இறுதியாக பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி,

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி குறித்து தலைமை கழகமே முடிவெடுக்கும் என்றும், தலைமைக் கழகம் எடுக்கும்முடிவு தான் இறுதியானம் என்றும்,  அதற்குள் அவசர அவசரமாக பொது இடங்களில் பேசும்போது கூட்டணி குறித்த கருத்துக்களை தனிப்பட்ட முறையில் நிர்வாகிகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும்,  இதனால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வியூகத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் உருவாகும் என்பதால் இதுபோல தனிப்பட்ட முறையில் நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று  கூறியிருக்கின்றார்.

சமீபத்தில் தான் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருக்க வேண்டாம் என்றும்,  பாஜக ஏற்கனவே திமுக உடன் கூட்டணி இருக்கிறது என்றும், அவர் பொதுக்கூட்டத்தில் பேசி இருந்தார். இந்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது சிவி சண்முகத்தை மறைமுகமாக கண்டித்து இருக்கின்ற கருத்து என்று நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Categories

Tech |