Categories
தேசிய செய்திகள்

தேவையான ஆம்புலன்ஸ் இல்லை…! நாட்டின் தலைநகருக்கு ஏற்பட்ட அவலம் …!!

கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் 75 சதவீதத்துக்கும் அதிகமான பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். 

கொரோனா வைரஸின் தாக்கம் டெல்லியிலும் அதிக அளவில் இருந்து வருகிறது. அங்கு மட்டும் இன்று ஒரே நாளில் 381 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 6,923 ஆக அதிகரித்தது. 73 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2,069பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்கொரோனா  பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் அறிகுறிகளான காய்ச்சல், தும்மல், உடல் சோர்வு போன்றவை எதுவுமே இல்லாமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி மாநில அரசின் மருத்துவமனை ஆம்புலன்சுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் மருத்துவமனை ஆம்புலன்சில் பயன்படுத்திக் கொள்வதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுக்கு தேவைப்படும்போது தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படும். அதேபோல கொரோனாவின் சில அறிகுறி இருப்பவர்கள் மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி வீட்டிலிருந்தே சிகிச்சை பெற மேற் கொள்ளப் படுவார்கள்.

டெல்லியில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் 75 சதவீதத்துக்கும் அதிகமான பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Categories

Tech |