கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட காந்தி சிலையை மாவட்ட நிர்வாகம் அகற்றியதால் தர்ணாவில் ஜோதிமணி ஈடுபட்டார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர் அதற்கு காங்கிரஸ் கட்சியினர் மறுத்ததால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு கைது செய்து வேனில் ஏற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கைது செய்ததற்கு இயக்குனர் பொன்வண்ணன் தனது கலையின் வடிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், ” இந்து மகாசபா அமைப்பின் தலைவர் துப்பாக்கியால் சுட்டதையும், ஜோதிமணியின் உருவத்தை சித்திரமாக வரைந்து, அதில் காந்தி சுட்டவங்க கைது இல்லை.! காந்திக்காக போராடியவங்க கைது..! என்று சுட்டிக்காட்டியுள்ளார்.