Categories
மாநில செய்திகள்

இந்த வழக்கில் சிக்கினால் முன்ஜாமீன் கிடையாது…. உயர் நிதிமன்றம் அதிரடி…!!

மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கப்படாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மணல் கடத்தல் செய்து சிக்கியவர்கள் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த 15 மனுக்களை நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா விசாரித்தார். அப்போது பேசிய அவர், “மிகவும் எளிதாக மணல் கடத்தல் குற்றம் செய்பவர்களுக்கு முன் ஜாமீன் கிடைத்து விடுவதால் தைரியமாக மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இத்தகைய நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் கனிம வளம் இல்லாமல் போய்விடும். அடுத்த தலைமுறைகள் குடிநீருக்கு அவதிப்பட வேண்டிய சூழல் உருவாகும்.

முன்ஜாமீன் நிபந்தனையாக ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்தாலும் அதனை செலுத்துவதற்கும் கடத்தல் கும்பல் தயங்குவதில்லை. மிகவும் எளிதாக முன் ஜாமின் கிடைப்பதால் தான் தொடர்ந்து மணல் கடத்தலை செய்து வருகின்றனர். ஆனால் இனி மணல் கடத்தல் வழக்கில் சிக்குபவர்களுக்கு முன் ஜாமின் வழங்கப்படாது. சிறிது காலம் அவர்கள் சிறையில் இருந்தால் மட்டுமே மீண்டும் மணல் கடத்தலில் ஈடுபட தோன்றினால் பயம் வரும்” என கூறினார். அதோடு முன்ஜாமின் கேட்டு கொடுக்கப்பட்ட மனுக்களை செப்டம்பர் மூன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Categories

Tech |