Categories
அரசியல்

படுக்கை வசதி இல்லை… மாறுபட்ட மரணம் வீதம்…. அவ்வளவுதான் என்று சொல்லுறாங்க …!!

கொரோனா உயிரிழப்பு கணக்கெடுப்பில் இது ஒரு நடை முறை பிரச்சனை அவ்வளவுதான் என்றார் என ஸ்டாலின் குறிப்பிட்டார்.

காணொளி காட்சி மூலம் நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜூன் 13 மே மாதம் 28ம் தேதி நிகழ்ந்த மரணம் மூன்று வாரம் கழித்து ஜூன் 7ஆம் தேதி அரசின் செய்திக்குறிப்பில் வெளியிடப்படுகிறது. மே 24 முதல் ஜூன் 7ம் தேதி வரை நிகழ்ந்த ஏழு மரணங்கள் நேற்று  முந்தின செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளனர். சாதாரணமாக ஒரு மரணத்தை பதிவு செய்ய சென்னை மாநகராட்சி 21 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. ஆனால் இதுபோன்ற கொரோனா காலத்தில் மரணங்களை வெளியிட ஏன் தாமதம் ? மரணம் பற்றிய தகவல்கள் இல்லாமல்  அரசு எப்படி நோய் தடுப்பு  குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கிறது.

படுக்கை வசதி இல்லை:

சென்னையில் சுகாதார உட்கட்டமைப்பு நொறுங்கி போய்விட்டது என்பதை தான் இவையெல்லாம் வெளிப்படுத்துகின்றன. நோய் தடுப்பில் முன் வரிசையில் நிற்கும் கள வீரர்களையும் எவ்வித ஆதரவையும் இந்த அரசு அளிப்பதில்லை. அதுதான் மிக முக்கியமான  முன்னுரிமையாக இருக்கவேண்டும். மருத்துவமனைகளின் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுவதை பார்த்தால் இந்த நெருக்கடியை கையாலாகாத காலத்தே இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

அரசின் தோல்வி:

தலைமைப் பண்பு இல்லாதவரின் அரசின் தோல்வி என்பதை காட்டிலும் ஒவ்வொரு சென்னை வாசிகளும் ஆபத்தில் உள்ள சூழலில் நாம் இருக்கிறோம். ஆனால் இவை அனைத்தையும் மறைத்தே வருகிறது தமிழக அரசு. பத்திரிக்கையாளர்கள் ஆகிய நீங்கள் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளிகளின் இறந்தவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்துக் காட்டியுள்ளது குறித்த புலனாய்வு கட்டுரைகளை வெளியிட்டு  இருக்கீங்க.

இறப்பில் மாறுபட்ட புள்ளிவிவரம்:

இந்த செய்திகளின்படி பொது சுகாதாரத்துறை சென்னை மாநகராட்சி மற்றும் மருத்துவமனைகளில் 460 பேர் சென்னையில் இறந்துள்ளதாக ஜூன் 9ம் தேதி வெளியிட்டுள்ளது. ஆனால் மாநில சுகாதாரத்துறை 224 பேர் மட்டுமே இறந்ததாக தெரிவித்துள்ள. இதை தனிப்பட்ட நிறுவனம் ஆய்வு நடத்தி தகவல்களை சரி பார்த்து வெளியிட்ட அறிக்கை அல்ல. இரண்டு புள்ளி விவரங்களும் இருவேறு அரசு நிறுவனங்கள் நேரடியாக வெளியிட்ட வேறுபட்ட எண்ணிக்கையிலான தகவல் தான் இதுபோன்ற தகவல்களை முறையான சரிபார்ப்புக்கு பிறகு தான் அரசு வெளியிடுகிறதா ?

அவ்வளவு தான் என்று சொல்கிறார்கள்:

சென்னையில் கொரோனா வைரஸ்சால் இறந்த 236 பேரின் மரணம் அதாவது இரு மடங்கிற்கும் அதிகமான மரண எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளது தான் கவலை அளிக்கிறது. கணக்கில் வராத 236 பேர் மரணங்கள் என்பது ஏதோ ஒரு புள்ளி விபரம் மட்டுமல்ல. யாரோ ஒருவருக்கு மகனாகவோ, மகளாகவோ, அன்பிற்கு பிரியத்திற்கும் உடையவர்களாகவோ,  குடும்ப உறுப்பினர்களாகவோ இருந்து உயிரிழந்தவர்கள். இறப்பில் கூட இந்த 236 பேரின் கண்ணியம் அவமதிக்கப்பட்டுள்ளது.  தவறான தகவல் மூலம் மறைக்கப்படும் இந்த மரணங்கள் குறித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினர் அடையும் துயரங்களை இந்த அரசு புரிந்து கொள்ளுமா ? ஒரு படி மேலே போய் அப்போது சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர் கணக்கெடுப்பில் இது ஒரு நடை முறை பிரச்சனை அவ்வளவுதான் என்றார் என ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Categories

Tech |