கொரோனா இறப்பை தமிழக அரசு மறைத்துள்ளது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேசிய அவர் ஆளும் அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.அதில், சென்னையில் கொரோனா வைரஸ்சால் இறந்த 236 பேரின் மரணம் அதாவது இரு மடங்கிற்கும் அதிகமான மரண எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளது தான் கவலை அளிக்கிறது. கணக்கில் வராத 236 பேர் மரணங்கள் என்பது ஏதோ ஒரு புள்ளி விபரம் மட்டுமல்ல. யாரோ ஒருவருக்கு மகனாகவோ, மகளாகவோ, அன்பிற்கு பிரியத்திற்கும் உடையவர்களாகவோ, குடும்ப உறுப்பினர்களாகவோ இருந்து உயிரிழந்தவர்கள். இறப்பில் கூட இந்த 236 பேரின் கண்ணியம் அவமதிக்கப்பட்டுள்ளது.
ஒரு படி மேல போய்ட்டாங்க:
தவறான தகவல் மூலம் மறைக்கப்படும் இந்த மரணங்கள் குறித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினர் அடையும் துயரங்களை இந்த அரசு புரிந்து கொள்ளுமா ? ஒரு படி மேலே போய் அப்போது சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர் கணக்கெடுப்பில் இது ஒரு நடை முறை பிரச்சனை அவ்வளவுதான் என்றார்ஊரடங்கு அறிவித்து 85 நாட்கள் ஆகியும் மரணத்தை முறைப்படி கணக்கெடுக்கும் ஒரு நடைமுறையை ஏன் உருவாக்கப்படவில்லை. 236 பேரின் உயிரிழப்பை மறைப்பதை ரிப்போர்ட் செய்வதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல் என்று சொல்லி ஒதுக்கிவிட சொல்கிறார்களா.?
உள்நோக்கம் தெரியுது:
இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் இறப்பு தகவலை மறைக்க முடியாது. பத்திரிக்கை உட்பட எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிருபர்கள் கவனிக்கவில்லை என்றால் இறப்பு எண்ணிக்கையை மறைக்கவில்லை என்கிறாரா ? முதல்வர் இந்த எண்ணிக்கையை மறைத்தது குறித்துஅரசின் விளக்கங்களில் ஒரு பேரிடரை எப்படி பொறுப்பற்று மோசமாக அரசு நிர்வகிக்கிறது என்பதைப் பற்றியும் இறப்பு எண்ணிக்கையும் மறைப்பது அரசுக்கு உள்நோக்கமும் தெரிகிறது. தகவல்களை மறைப்பதற்கு அரசு உடந்தை. இறப்பு குறித்தான தகவல்கள் மருத்துவமனைகள், சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை, இடுகாடுகள் என்று பல்வேறு தரப்பிலிருந்து தகவல்கள் திரட்டப்படுகின்றன.
உயர் மட்ட பங்களிப்பு:
பலருக்கும் இது குறித்து தெரியும். அரசு இதனை அதிகாரிகள் மட்டத்தில் உள்ள பிரச்சனை என்று கூற முயற்சிக்கலாம். ஆனால் இது உண்மையை மறைக்க செய்யப்பட்ட வேலை. அரசின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் பங்களிப்பு இன்றி இவ்வளவு பெரிய அளவில் இறப்பு எண்ணிக்கையை மறைக்க முடியாது. இறப்பு பற்றி விசாரிக்க கமிட்டி அமைத்தது மட்டுமே அரசு கொண்டுவந்த ஒரே தீர்வா? பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் பரிந்துரையின் பேரில் அரசு ஆணை எண் 196 கடந்த 20/4/2020 அன்று அனைத்து மருத்துவமனைகளிலும் இருந்தும் பெறப்பட்ட இறப்பு குறித்த அறிக்கைகளை தணிக்கை செய்வதற்கு ஒரு கமிட்டி அமைத்தார்கள்.
கமிட்டி தோல்வி:
இப்போது மீண்டும் ஒரு இறப்பு எண்ணிக்கை சரிபார்ப்பு கமிட்டியை பழைய கமிட்டி உறுப்பினர்கள் வைத்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் தலைமையில் நியமித்துள்ளார். முதல் கமிட்டி ஒருமுறையாவது கூடியதா ? அது தொடர்பான தகவல் அறிக்கைகள் ஏன் இதுவரையில் பொதுவெளியில் இல்லை? அந்த கமிட்டி தோல்வி அடைந்து விட்ட காரணமாக ரெண்டாவது கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதா ? ஒரு நெருக்கடியை தவறுதலாக கையாண்டுவிட்டு அதே கமிட்டி மேல் கமிட்டியை நியமித்தது எப்படி சரி செய்ய முடியும்?
1st 16 இப்போ 10தான் :
தினமும் மாலையில் கொரோனா நோய் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அதில் ஏராளமான குளறுபடிகள் செய்து வருகிறார்கள். ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ரிப்போர்டிங் பார்மெட் தொடர்ந்து மாற்றப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதன்முதலாக 16 வகையான தகவல்களுடன் தினசரி செய்திக் குறிப்பு வெளியிட்டார். இன்றைக்கு 10 வகை தகவலுடன் முக்கிய தகவல்களை மறைத்து செய்திக்குறிப்பு வெளியிடுகிறார்கள். ஏப்ரல் 24 ஆம் தேதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான படுகைகள், வென்டிலேட்டர்கள் பற்றிய தகவல்கள் ஏதும் செய்திக்குறிப்பில் வெளியாகவில்லை என இப்படிப்பட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அரசிடம் பதில் இல்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.