Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

” வேடந்தாங்களில் பறவைகளின் வருகை குறைவு “ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சுற்றுலா பயணிகள் !!..

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் இல்லாத காரணத்தினால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றன

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள  பிரபலமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வருடந்தோறும் நவம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும். அம்மாதங்களில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ் கியூபா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 24 வகையான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்கல் வருவது வழக்கம் இந்நிலையில் கடந்த ஆண்டு பருவ மழை சரியாக போகாததால் வேடந்தாங்கல் ஏரியில் நீர் வரத்து குறைந்துள்ளது இதனால் இம்முறை பறவைகளின் எண்ணிக்கையும் மிக அதிக அளவில் குறைந்து உள்ளது ஆகையால் சுற்றுலாப் பயணிகள் வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு செல்வதை தவிர்த்து விட்டனர் மேலும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதனால் கிராமமக்கள் இந்த ஆண்டு சரணாலயத்தை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |