Categories
மாநில செய்திகள்

இனி இவர்களுக்கும் பஸ்ஸில் கட்டணமில்லை…! இலவச டோக்கன் கொடுக்கும் தமிழக அரசு… போக்குவரத்துத்துறை சூப்பர் அறிவிப்பு..!!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சென்னையில் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லாமல் பயணம் செய்யக்கூடிய வகையில் அவர்களுக்கு வழங்கக்கூடிய டோக்கன்கள் குறித்து செய்தி குறிப்பு மூலமாக அறிவிப்பு செய்திருக்கிறார்கள். இதில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மாநகர பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணக் கூடிய வகையில் அவர்களுக்கான டோக்கன்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள இருப்பதாகவும்,  ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் விதம் ஆறு மாதத்திற்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது அவர்களுக்கான அடையாள அட்டை புதுப்பித்தல்,  பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், 40 மையங்களில் வரக்கூடிய டிசம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை வழங்குவதற்கான நடவடிக்கையும்,  அந்தந்த பேருந்து பணிமனைகளில் காலை 8:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிக்கை மூலம் தெரிவித்து இருக்கின்றார்கள்.  மூத்த குடிமக்கள் பேருந்து பணிமனைகளில் அந்த டோக்கனை பெற்றுக்கொள்ளலாம் என்றும்,

அடையாறு, திருவான்மியூர்,  மந்தவெளி,  டி.நகர்,  குரோம்பேட்டை, ஆலந்தூர், அம்பத்தூர், ஆவடி, அயனாவரம் உள்ளிட்ட இடங்களிலும் அதேபோல புறநகர் பகுதியான தாம்பரம், பூந்தமல்லி, திருவொற்றியூர் போன்ற இடங்களிலும் இதை மூத்த குடிமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிக்கை மூலமாக தெரிவித்து இருக்கிறார்கள்.அதேபோன்று அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம்,  கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை இதுபோன்ற அடையாள அட்டைகள் கொடுத்து அதிகாரிகளிடம் அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தகவலை தெரிவித்து இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |