ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்காத நிலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவ பெண்கள் 10 கிலோமீட்டர் நடந்து சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று 2ஆம் அலை காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தடை விதித்துள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் பகுதியில் வசிக்கும் மீனவ பெண்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க பேருந்து, கார், ஆட்டோ வசதி இல்லாததால் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடிக்கு நடந்தே சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்துள்ளனர்.