Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த படம் எடுக்க வாய்ப்பில்லை…. வெங்கட்பிரபு சொன்ன ஷாக் நியூஸ்…. அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்….!!

மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வாய்ப்பில்லை என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த அப்டேட்டை வெளியிடுமாறு ரசிகர்கள் பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் படக்குழு வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் உள்ளனர்.

வரும் மே மாதம்1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்திற்கான அப்டேட்டை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித் நடிப்பில் உருவான மங்காத்தா திரைப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபு சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, சில நாட்களுக்கு முன்பு நான் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எனக்கு ஒரு போன் வந்தது.

அது வேற யாரும் இல்லை. நம்ம தல அஜித் தான். அவர் என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார்.நானும் ஒரு கதையை போனிலேயே அவரிடம் கூறினேன். அப்போது அவர் என்னிடம் போன் பண்ணி கதை கேட்டது எனக்கு சர்ப்ரைஸ் ஆக இருந்தது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய வெங்கட் பிரபு அஜித்தின் 50வது படமாக நான் எடுத்த மங்காத்தா படம் இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. ஆனால் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார். இச்செய்தி அஜித் ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

Categories

Tech |