Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

11 வருஷமா குழந்தை இல்லை…. மனைவி செய்த காரியம்…. கணவர் எடுத்த விபரீத முடிவு…!!

நாகர்கோவிலில் மனைவி செய்த காரியத்தால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த 34 வயதுடைய கதிரவன் என்பவரும் 32 வயதுடைய அஜிதா என்பவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. இதனால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அஜிதா வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதனை அறிந்த கதிரவன் அதிர்ச்சி அடைந்து மனம் உடைந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன்பிறகு கதிரவனின் உடலைக் கண்ட உறவினர்கள் அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |