தேனி மாவட்டத்தில் குழந்தை இல்லாமல் தவித்து வந்த மனைவி விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள டொம்புச்சேரியில் நாகராஜ் என்பவர் அவரது மனைவி காளியம்மாள் உடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் இருவருமே மனவேதனையில் இருந்துள்ளனர். இதனையடுத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான காளியம்மாள் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை பார்த்த அவரது கணவர் சோகத்தின் உச்சிக்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து தகவலறிந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளியம்மாளின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.