Categories
தேசிய செய்திகள்

No Claim Bonus… இதுவரை தெரியாத உண்மை… என்ன தெரியுமா..?

வாகனங்கள் வாங்கும்போது நாம் உரிமைகோரல் பெறாத போனஸ், என்ற நோ கிளைம் போனஸ் குறித்து விவரம் பலருக்கு தெரியாமல் இருக்கும்.

நாம் கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அந்த காரில் காப்பீட்டு பாலிசியை படித்துப் பாருங்கள். அதில் விபத்துக்கள் ஏற்பட்டு உரிமைகோரல் எதுவும் வழங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் நோ கிளைம் போனஸ் கூடிக் கொண்டே வந்து 50% சதவீதத்துடன் அப்படியே இருக்கும்.

அவ்வாறு விபத்து கிளைம் எதுவும் வாங்காமல் இருக்கும் நிலையில் காரை விற்றுவிட்டு வேறு கார் வாங்க முடிவு செய்தால், விற்கப்படும் கார் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகி நோ கிளைம் போனஸ் சட்விகேட் வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்க வேண்டும்.

அவர்கள் தரும் சர்டிபிகேட்டை புதிய கார் வாங்கும் ஏஜென்சி இடம் கொடுத்து புதிதாக எடுக்கும் வாகன பிரிமியத்தில் உங்கள் பழைய காரின் No claim bonus எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவு Discount பெற்றுக்கொள்ளலாம். உங்களின் பழைய கார் வாங்குபவர்கள் அவர்களின் பெயரில் இன்சூரன்ஸ் மாற்றும் போது உங்களது நோ கிளைம் போனஸ் அவர்கள் பயன்படுத்த முடியாது.

வித்தியாசத்தை அவர் கட்டிய ஆக வேண்டும். எனவே நீங்கள் பயன்படுத்தாவிட்டால் அந்த நோ கிளைம் போனஸ் யாருக்கும் பயனில்லாமல் போய்விடும். கார் நோ கிளைம் போனஸ் என்பது காருக்கு அல்ல, விபத்தில் சிக்காமல் காரை இயக்கி வந்த அந்த காரின் உரிமையாளருக்கு தான் சொந்தம். அந்த நோ கிளைம் போனஸ் புதிய வாகனம் எடுக்கும் போது மறக்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |