Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலுக்கு எந்தஒரு தனிப்பட்ட சமூகமும், பகுதியும் பாதிக்கப்படக்கூடாது: லாவ் அகர்வால்..!

தவறான தகவல்களையும் பீதியையும் பரப்புவதை நாம் தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இன்று செரோதியாளர்களை சந்தித்த அவர், “கடந்த 14 நாட்களில் சுமார் 85 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும், சுமார் 16 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என கூறினார். இந்த மாவட்டங்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட மூன்று புதிய மாவட்டங்கள் மகாராஷ்டிராவின் கோண்டியா, கர்நாடகாவின் தேவங்கேர் மற்றும் பீகாரில் உள்ள லக்கி சராய் ஆகியவை ஆகும்” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் , “கொரோனா பரவலுக்கு எந்த சமூகமும், பகுதியும் தனிப்பட்ட முறையில் பெயரிடப்படக்கூடாது. குறிப்பாக, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் அதேபோல, காவல்துறையினர் மக்களுக்கு உதவும் நேரங்களில் அவர்கள் குறிவைத்து தாக்கப்படக்கூடாது” என லாவ் அகர்வால் கூறி உள்ளார்.

“அனைத்து மாநிலமும், ஒரு தீவிர பிரச்சாரத்தின் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள களங்கத்தை தீர்க்க வேண்டும் என கூறினார். அதாவது, மீட்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து கொரோனா பரவும் ஆபத்து இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். உண்மையில், குணமடைந்தவர்களின் ரத்த பிளாஸ்மாவை கொண்டு மற்ற நோயாளிகளை குணப்படுத்தும் முறையில் இருந்து தெரிந்து கொள்ளலாம்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |