Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சிக்கும், விஜய்க்கும் எந்த தொடர்புமில்லை – குண்டை தூக்கி போட்ட எஸ்ஏசி விளக்கம் …!!

தொடங்கப்பட்டு இருக்கும் கட்சிக்கும், நடிகர் விஜய்க்கும் எந்த தொடர்புமில்லை என எஸ்எஸ்.ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என்பது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் புதிய திருப்பமாக அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் முக்கிய கருத்தை தெரிவித்து இருக்கின்றார். அதில், நான் கட்சி பதிவு செய்திருப்பது உண்மை. ஆனால் இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். நான் தனிப்பட்ட முறையில் கட்சியாக பதிவு செய்திருக்கிறேன். இதற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தம் கிடையாது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அதேபோல விஜய் ரசிகர் மன்றத்தை தொடங்கியது நான்தான். 1992ல் தொடங்கினேன், அதற்குப் பிறகு நற்பணி மன்றமாக மாற்றினேன். அதைத் தொடர்ந்து மக்கள் இயக்கமாக மாற்றி இந்த அமைப்பை நான் செயல்படுத்தி வருகிறேன் எனவும் எஸ்ஏசி தெரிவித்துள்ளார்.

இதில் மிக சிறந்த இளைஞர்கள் இருக்கிறார்கள். துடிப்பான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய சக்தி வீணாகக் கூடாது என்பதற்காக நான் இந்த மாதிரி ஒரு கட்சியை தொடங்கி அவர்களை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்த வேண்டும், செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் ஆரம்பித்து இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இதில்  பிற்காலத்தில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு அதற்கு இதற்கு தற்போது பதில் சொல்ல முடியாது. இதற்கு விஜய் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர் பின்னால் இருக்கக்கூடிய அந்த இளைஞர்களை நான் சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த கட்சியை பதிவு செய்து, அவர்களை இதில் செயல்பட வைக்க உள்ளேன் என்று தகவல் கொடுத்திருக்கிறார்.

Categories

Tech |