Categories
தேசிய செய்திகள்

கடந்த 4 நாட்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை: உத்தரகண்ட் முதல்வர் அறிவிப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 100 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தகவல் அளித்துள்ளார்.

இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 918 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கல் என பார்த்தால், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் ஆகியவை தான். இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் மிக குறைந்த அளவே மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, உத்தரகண்டில் இதுவரை 35 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், அதில் இதுவரை 7 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். கடத்த 100 மணி நேரங்களில் நடத்திய சோதனையில் இதுவரை யாருக்கும் புதிதாக கொரோனா உறுதியாகவில்லை என முதல்வர் கூறியுள்ளார். அதுபோல, அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என்பது ஆறுதலான விஷயம்.

Categories

Tech |