முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனையில் முதல்வருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தகவல்கள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். அப்போது பேசிய அவர், சென்னையில் 530 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்தார்.
காய்ச்சல் கண்டறியும் முகாம்களில் தினந்தோறும் 30,000 பரிசோதனைகள் செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக பிளாஸ்மா சிகிச்சை செய்யப்படுகிறது என அவர் தெரிவித்தார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 62,087 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் கொரோனா பாதித்த 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 34,112 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 37 பேர் கொரோனாவுக்கு மரணமடைந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 794 ஆக அதிகரித்துள்ளது.