ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என ஈஷா யோகா மையம் விளக்கம் அளித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் இருந்தே மாநில சுகாதார அதிகாரிகள் ஈஷா மையத்தில் மருத்துவ சோதனைகளை பார்வையிட்டு வருகின்றனர். தற்போது வரை ஈஷாவில் கொரோனா தொற்று இல்லை. வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிப்ரவரி மாதம் ஈஷா யோகா மையம் சார்பில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இதில் வெளிநாட்டினர், மற்றும் இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதனால் அந்த விழாவில் கொரோனா வைரஸ் பரவி இருக்க கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் தோற்று இருப்பதாக சிலர் வதந்திகஇதனால் ளையும் ஏற்படுத்தி வருகின்றனர். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமியிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், கொரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம் என அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏற்கனவே டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய ஏராளமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் கொரோனா பரவியிருக்குமோ? என்ற அச்சம் எழுந்த நிலையில் ஈஷாவில் கொரோனா தொற்று இல்லை என அறிவித்துள்ளனர்.