சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா இல்லை என பொது சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அமைச்சருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் “நெகட்டிவ்” வந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.
அதன் முடிவுகள் தற்போது வந்த நிலையில் அமைச்சருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக 6 அமைச்சர்கள் கொண்ட குழு தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.