Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு…நோ டி ஷர்ட்… நோ ஜீன்ஸ்… அரசு அதிரடி அறிவிப்பு..!!

அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாட்டை விதித்துள்ள மத்திய அரசு ஜீன்ஸ், டி-ஷர்ட் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகத்திற்கு வருவதற்கு தடை விதித்துள்ளது.

அரசு ஊழியர்கள் அந்த பதவிக்கு தகுதியான ஆடையை அணிய வேண்டும். எளிமையாக இருப்பதாக வெளிப்படுத்தும் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகம் வரக்கூடாது என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக கடந்த 8ஆம் தேதி அனைத்து அரசு அலுவலர்களுக்கும் மாநில அரசு சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமை அன்று கண்டிப்பாக கதர் ஆடைகளை, கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும்.

இந்த கட்டுப்பாடுகள் அரசு பணியில் நிறைந்த ஊழியருக்கு மட்டும்தான். ஒப்பந்த அடிப்படையில் அரசு ஆலோசகர்களாக பணியாற்றுவதற்கு இது பொருந்தாது. மக்களிடையே அரசு ஊழியர்களுக்கான மதிப்பு மிகவும் மோசமாக இருந்து வருகிறது. ஆதலால் அவர்கள் மத்தியில் நல்ல நடத்தையை ஏற்படுத்தவும், ஆடையில் ஆளுமைத்திறனை உண்டாகும் இந்த ஆடை கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. ஊழியர்கள் சுத்தமான ஆடையை அணிய வேண்டும். சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும். அழுக்கான ஆடைகளை, ரப்பர் செருப்புகளை அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.

அவ்வாறான ஆடைகள் வேலைத் திறனை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர். பெண்கள் புடவை, சுடிதார், சல்வார், பேண்ட் சட்டை தேவைப்பட்டால் சால் அணிந்து வரலாம். ஆனால் ஆண்கள் கண்டிப்பாக பேண்ட் சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். வண்ண ஆடைகள், பளிச்சென்று தெரியும் ஆடைகள், டிசைனில் உள்ள ஆடைகளை அலுவலகத்திற்கு அணிந்து வரக்கூடாது. பேண்ட், டீசர்ட் போன்றவற்றை அரசு ஊழியர்கள் பணியின் போது அணிந்து இருக்கக்கூடாது. பெண் ஊழியர்கள் காலணிகள், சாண்டல்கள், ஷூ அணியலாம். ஆண் ஊழியர்கள் சாண்டல்கள், ஷூ மட்டுமே அணிய வேண்டும். சாதாரண ரப்பர் காலணிகளை அணியக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |