திமுக சுரப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை என்று சொன்னால் அது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் உடைய கோட்டை. இப்பொழுது நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களின் உடைய எக்கு கோட்டை என்பதை நிரூபிக்கக் கூடிய வகையில், நம்முடைய கோவையை மக்கள் நடந்து முடிந்திருக்கின்ற நகரப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 96 விழுக்காடு கழகத்திற்கு பெரிய இமாலய வெற்றியை வாக்காள பெருமக்கள் வழங்கி இருக்கின்றார்கள்.
இந்த நகரப்புறத்தினுடைய உள்ளாட்சி தேர்தலை வெற்றியை தொடர்ந்து… வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில்…. கோவையில் இருக்கக்கூடிய 10 சட்டமன்ற தொகுதிகளும், மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை உதயசூரியன் பெற்று மகத்தான வெற்றியை கழகத் தலைவர்கள் அவர்கள் அறிவிக்கின்ற வேட்பாளருக்கு வழங்க வேண்டும் என்பதற்கான பணிகளை நாம் தொடங்கி இருக்கின்றோம், நம் மக்களும் தயாராக இருக்கின்றார்கள்.
நான் இந்த நேரத்தில் இங்கே வருகை தந்திருக்கும் கழக நிர்வாகிகளுக்கும்… கழகத்தினுடைய செயலாளர்களுக்கும்…. பொது மக்களுக்கும் வேண்டுகோளாக வைப்பது ? வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை நாம் மனதில் வைக்க வேண்டும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இங்கே வந்து பேசின டெட் பாடி இல்ல எடப்பாடி. SORRY கொஞ்சம் தடுமாற்றம் வந்துடுச்சு. தேர்தலுக்கு முன்னாடி கொரோனா வந்துச்சு. நம்முடைய கழகத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இந்த கொரோனா நோய் தொற்றால் தமிழக மக்கள் வீடுகளிலே முடங்கி இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.