Categories
தேசிய செய்திகள்

“சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை” நிர்மலா சீதாராமன்..!!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

கடந்த ஒரு வாரமாக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதால் இந்தியா முழுவதும் என்ன நடக்கப்போகிறது என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்து  மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு  கடுமையான எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியது.

Related image

அதை தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை. உரிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு  ஆய்வுகளுக்குப் பிறகே சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியுள்ளோம் என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து விவாதத்திற்குப்பின் மசோதாவுக்கு பின் வாக்கெடுப்பு தொடங்கியது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும் , எதிராக 41 வாக்குகளும் பதிவாகி ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |