Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி… யாரும் வராதீங்க… வெறிச்சோடி காணப்பட்ட சபரிமலை!

கொரோனா வைரஸ் எதிரொலியால்  விடுமுறை நாளான நேற்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. 

சீனாவில் உருவாகி உலகையே கொரோனா நடுங்க வைத்து கொண்டிருக்கிறது. இந்த கொடிய கொரோனா 130க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலைகார கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவ ஆரம்பித்து விட்டது. இதுவரை 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் இறந்துள்ளனர்.

இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக பொது மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தியேட்டர்கள், வணிக வளாகங்கள் என பல்வேறு முக்கிய இடங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்திருந்ததால் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட வெகு குறைவாகவே இருந்தது. பொதுவாக விடுமுறை நாட்களில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் நேற்று விடுமுறை நாளில் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

பம்பை – நீலிமலையேற்றம் -அப்பாச்சிமேடு – சன்னிதானத்தில் மிகவும் அமைதியான சூழ்நிலையே நிலவியது. மேலும் சபரிமலைக்கு செல்லும் வழியில் இருக்கும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே திருச்சூர் மாவட்டத்தின் குருவாயூர் உள்ளிட்ட முக்கிய கோவில்களுக்கு சில நாட்களுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |