Categories
மாநில செய்திகள்

“குடிநீர் இல்லை, சாப்பாட்டில் புழு”…. ஆதி திராவிடர் நல விடுதி மாணவர்கள் கடும் அவதி… பாஜக அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் வசிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுவதாக பாஜக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாஜக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மாநிலம் முழுவதும் உள்ள சமூகத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் எப்படியாவது படித்து சமுதாயத்தில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னைக்கு வருகிறார்கள். அதன்பிறகு தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் விடுதிகளில் மாணவர்கள் அடிப்படை வசதி கூட இன்றி தவித்து வருகிறார்கள். மழை காலங்களில் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதி ஒழுகுவதாகவும், குடிநீர் கிடைக்காமல் தவிப்பதாகவும், வழங்கப்படும் சாப்பாட்டில் புழுக்கள் நெளிவதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த முறை மழை பெய்த போது மாணவர்கள் விடுதிக்குள் செல்ல முடியாமலும், தூங்குவதற்கு கூட இடம் இன்றி நோய் தொற்றால் அவதிப்பட்டதாகவும் வெளிவரும் செய்தி மனதை உலுக்கிறது. அதன் பிறகு விடுதியில் வழங்கப்பட வேண்டிய கட்டில், போர்வை மற்றும் தலையணை எதுவுமே வழங்கப்படவில்லை. அதோடு மாணவர்களுக்கு மாதாமாதம் இதர செலவுகளுக்காக வழங்கப்பட வேண்டிய 150 ரூபாய் பணமும் வழங்கப்படவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறையால் 33 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் 20 திட்டங்கள் கூட செயல்படுத்தப்படவில்லை. கடந்த வருடம் ஆதிதிராவிடர் நலனுக்காக 4,099 கொடி தமிழக அரசு நிதி ஒதுக்கிய நிலையில், 20 நலத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. மேலும் அரசின் விதியை தேவையில்லாமல் வீணடித்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |