சுவிட்சர்லாந்து அரசு இன்றிலிருந்து இலவச கொரோனா பரிசோதனைகள் கிடையாது என்று அறிவித்திருக்கிறது.
ஸ்விட்சர்லாந்து அரசாங்கம், இந்த அறிவிப்பிற்கு பின் நாட்டில் பல மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள் என்று கருதுவதாக தெரிவித்துள்ளது. இலவச கொரோனா பரிசோதனைகள் கிடையாது என்று அறிவிக்கப்பட்டாலும், சில விதிவிலக்குகள் நடைமுறையில் இருக்கிறது.
அதாவது, 16 வயதுக்குட்பட்டவர்கள், கொரோனா தொற்று அறிகுறிகள் ஏற்பட்டவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் சேரவிரும்பும் வயதானவர்கள் போன்றோருக்கு இலவசமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
எனினும் அவர்களுக்கு கொரோனா சான்றிதழ் அளிக்கப்படாது. இதனால் உணவகங்கள் போன்ற இடங்களுக்கு அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். நாட்டில் கடந்த ஆறு மாதங்களாக இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் திட்டம் இருக்கிறது.
இதனால், சிலர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல், இலவச பரிசோதனை மட்டும் மேற்கொண்டு, தங்களுக்கு தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்துக் கொண்டு அனைத்து இடங்களிலும் சுற்றித் திரிகிறார்கள். இனிமேல் அவ்வாறு நிகழக்கூடாது என்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.