Categories
தேசிய செய்திகள்

NO கூகுள் பே… NO போன் பே… Direct பாக்கெட் பே தான்… சிக்கிக் கொண்ட பெண் காவலர்..!!

பெண் காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கும் காட்சி இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

புனே நகர பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியை கவனித்துக் கொண்டிருந்த பெண் காவலர் ஒருவர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்றது அடுத்து பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி பகுதி சந்திப்பில் பணியில் இருந்த அந்த பெண் காவலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியிருந்தார்.

கைநீட்டி பெறுவதை மறைக்கும் வகையில் வாகன ஓட்டி இடம் ரூபாயை தனது பேண்ட் பாக்கெட்டில் வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். பலரிடம் அவர் இப்படி பெறுவதை அந்த இடத்தில் சில இளைஞர்கள் மறைந்திருந்து செல்போனில் படம் பிடித்துள்ளனர் .அந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் அப்லோடு செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலானதோடு உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்ததாக துணை போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

இந்த செயலில் ஈடுபட்ட பெண் காவலர் சுவாதி சோனர் என அடையாளம் தெரிந்தது. இதையடுத்து அவரை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். லஞ்சம் பெற்ற இடத்திற்கு அருகே நான்கு காவலர்களும், காவல் அதிகாரிகளும் இருந்தனர். இருப்பினும் அவர்களுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என தெரிய வந்துள்ளது.

Categories

Tech |