Categories
மாநில செய்திகள்

கொரோனா பரிசோதனைக்கு எந்த தயக்கமும் காட்டக்கூடாது – அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தல்!

கொரோனா பரிசோதனைக்கு எந்த தயக்கமும் காட்டக்கூடாது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எந்த தொய்வும் இல்லை என கூறியுள்ளார். தளர்வுகள் அதிகரிக்கும் சூழலில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய பலருக்கு தொற்று இருப்பதால் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பரிசோதனைக்கு எந்த தயக்கமும் காட்டக்கூடாது, சளி, இருமல் இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும் என விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

ரயில்கள், விமானங்கள் மூலம் வரும் தொற்று தொடர்பாக எதிர்வரும் சூழல்களை சமாளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அவர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறு தி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |