Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் வீட்டின் வாடகை கிடையாதா ? முதல்வர் பதில் …!!

தமிழகத்தில் வீட்டின் வாடகையை உரிமையாளர்கள் வாங்க கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை அத்தியாவசியதேவைகளை தவிர அனைத்தும் முடங்கியுள்ளதால் பொருளாதார ரீதியாக பல்வேறு வகையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் டெல்லி மாநில முதல்வர் அடுத்த 3 மாதங்களுக்கு வீட்டு வாடகையை கேட்டு கட்டாயப்படுத்த வேண்டாம், அவர்கள் கொடுக்கவில்லை என்றால் டெல்லி அரசு உங்கள் வீட்டின் வாடகையை கொடுக்கும் என்று வீட்டின் உரிமையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கி இருந்தார்.

இதே போல இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்களிடம் 1 மாத வீட்டு வாடகையை வாங்க கூடாது என்று மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் இது போன்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

Categories

Tech |