சஸ்பன்ட் செய்ததற்கான காரணம் தெரியவில்லை என்று கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார் .
காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். தற்பொழுது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கமிட்டி இவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதன்படி கராத்தே தியாகராஜன் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும் இவர் தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாகவும் ஒழுங்கீனம் காரணமாகவும் இந்த முடிவை காங்கிரஸ் கமிட்டி எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து கூறுகையில்,என்னை இதற்கு முன்னாள் பல முறை சஸ்பெண்ட் செய்து உள்ளார்கள். ஆனால் தற்பொழுது எதற்கு என்னை சஸ்பெண்ட் செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
இது கட்சியில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தமா இல்லை,வெளியிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தமா என்று எனக்கு தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று பிடிவாதமாக இவர் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.