Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வருமானம் இல்ல… கலெக்டர் நேரில் ஆய்வு… கோரிக்கை விடுத்த தொழிலாளர்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் விசைத்தறி கூடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் குமார பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமாக விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் விசைத்தறி இயக்கத்திற்கு அரசு தடை விதித்த நிலையில் விசைத்தறி தொழிலாளர்களும், உரிமையாளர்களும் வருமானம் இல்லாமல் பெரும் அவதிபெற்று வருகின்றனர். இதனையடுத்து சில பகுதிகளில் அரசின் விதிமுறைகளை மீறி தறி பட்டறைகள் இயங்கி வரும் நிலையில் வருவாய் துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் குமாரபாளையம் பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து விசைத்தறி கூடங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விசைத்தறி கூடங்களில் எத்தனை பணியாளர்கள் வேலை செய்கின்றனர் என்றும், அவர்களின் வருமானம் குறித்தும் அங்கு நூல் ஓட்டி கொண்டிருந்த பெண்களிடம் ஸ்ரேயா சிங் கேட்டறிந்துள்ளார். இந்த ஆய்வின் போது திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி, தாசில்தார் தங்கம் ஆகிய அதிகாரிகள் உடனிருந்துள்ளனர்.

Categories

Tech |