Categories
மாநில செய்திகள்

நீதிபதி வேண்டாம்…”தலைமை நீதிபதிக்கு மனு”….திரண்ட 64 வழக்கறிஞர்கள்…!!

கிறிஸ்துவ மத வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் முன் பட்டியலிட வேண்டாம் என்று 64 வழக்கறிஞ்சர்கள் தலைமை நீதிபதிக்கு மனு அளித்துள்ளனர்.

சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் பாலியல் புகாரில் சிக்கி பணிநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர் ஒருவர் தனது பணி நீக்க உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் பேராசிரியரின் பணிநீக்கத்தை இரத்து செய்யமுடியாது என்று கூறியதோடு கிருத்துவ கல்விநிலையங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.இதனால் பெற்றோர் அச்சத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

Image result for Judge Vaidyanathan

மேலும் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக  குற்றச்சாட்டு இருப்பதாக தெரிவித்தார். நீதிபதியின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தனது கருத்தை திரும்பபெறுவதாக  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார். இந்நிலையில் இன்று 64 வழக்கறிஞர்கள் கூட்டாக சேர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் கிருஸ்த்துவ மதம் சார்ந்த வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் முன் பட்டியலிட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |