Categories
அரசியல்

கொஞ்சமும் பொறுப்பு இல்லாத மனிதர்கள் கையில் ஆட்சி சிக்கி இருக்கிறது: ஸ்டாலின் ஆவேசம்..!

மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படிக் காக்கும்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தமிழக சுகாதாரத்துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றிச் சரி செய்வது எனவும் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் செய்ய தினமும் பேட்டி கொடுத்தா போதுமா? என கேள்வி எழுப்பினார். தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையையும், மரணம் அடைந்தோர் எண்ணிக்கையையும், மரணம் அடைந்தோர் எண்ணிக்கையையும் வாசித்தால் போதுமா?.

சில ஆயிரம் மருத்துவர்களையே முறையாக கவனிக்க முடியாத ஆட்சியர்கள் பல லட்சம் மக்களை எப்படிக் காப்பாற்ற போகிறார்கள் என்று நினைத்து பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது என தெரிவித்துள்ளார். கொஞ்சமும் பொறுப்பு இல்லாத மனிதர்கள் கையில் ஆட்சி சிக்கி இருக்கிறது. மேலும், உணவு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என மருத்துவர்கள் போராட்டம் நடத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பயிற்சி மாணவர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்திய செய்தி கொரோனவை விட கொடூரமானது. மக்களை காக்கும் மருத்துவர்களுக்குக்கூட போதிய வசதி செய்துதர முடியாத அரசாங்கமா இது? இது மக்களை காக்கும் அரசா? என ஆவேசமாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சென்னை போன்ற பொது மருத்துவமனைகளிலேயே இந்த நிலைமை என்றால் மற்ற மருத்துவமனைகள் பற்றி சொல்ல தேவையில்லை” என குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம், அம்மா உணவகங்களை வைத்து அதிமுக அரசியல் செய்வதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின், இன்று மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Categories

Tech |