கர்நாடகாவிற்கு இனி ஊரடங்கு தேவைப்படாது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு என்பது பொதுவாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு குறைந்து காணப்படுவதால், ஐந்தாவது கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இருப்பினும், பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் சில மாவட்டங்களில் மட்டும் பொது முடக்கத்தை அமல்படுத்த மத்திய அரசு தயார் நிலையில் இருக்கிறது.
அந்த வகையில் கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடாகாவில் கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கர்நாடாகாவில் ஒருபோதும் ஊரடங்கு தேவைப்படாது என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் எந்த தொந்தரவும் இன்றி தங்களின் இயல்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார். இவர் கூறுவதை பார்க்கையில், மிக விரைவில் கர்நாடகா இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.