Categories
உலக செய்திகள்

இனி கொரோனா பரிசோதனையை…” செல்போன் மூலமே பண்ணலாம்”… 90% துல்லியமான முடிவு…!!

மீண்டும் உருவெடுக்கும் கொரோனாவால் மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில் செல்போன் மூலம் கொரோனா  பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகின்ற நிலையில் இன்று தோற்று பரவிய ஏறத்தாழ ஒரு ஆண்டுகள் ஆகப்போகிறது. இதன் வீரியம் குறைந்த பாடில்லை. இந்த சமயத்தில் பாதிப்புக்கு பல மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனை செய்யப்படும் முறையும் அதிகரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 16 கோடியை கடந்துள்ளது.

ஒரு பக்கம் பாதிப்பு அதிகமாகி கொண்டு இருந்தாலும் 8.22 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இப்படி உலகம் முழுவதும் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் பிரான்சில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக தொடங்கியுள்ளது. இதனால் பல பகுதிகளில் பொதுமக்களின் பரிசோதனை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் பிரான்ஸ் மருத்துவ நிபுணர் ஒருவர் செல்போன் மூலம் கொரோனா தொற்றை கண்டறிய புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளார். இதன் மூலம் சளி மாதிரி பரிசோதிக்கும் கருவி ஒன்றை செல்போனுடன் செலுத்தினால் அதன் மூலம் கண்டறிய இயலும் எனவும், சோதனையில் இது 90% சரியான முடிவை அறிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |