விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ 6 ஆயிரம் உதவித்தொகை இனி மீனவர்களுக்கும் வழங்கப்படும் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
கேரளா மாநிலத்தில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். அதில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ 6 ஆயிரம் உதவித்தொகையாக மத்திய அரசு விவசாய மக்களுக்கு வழங்கிவருகின்றது. இந்தப் பணம் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் நேரடியாக அவர்களுடைய வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டு வருகின்றன.
இதுபோலவே மீனவர்களுக்கும் இத்திட்டத்தை அமுல் படுத்தி நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, மீன்வளத்துறை மந்திரியிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அதன்பின் தேர்தல் பிரசாரம் தொடங்கிய நிலையில் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றது. அதில் ஒன்றாக மேற்கு வங்காளம், புதுச்சேரி பா.ஜ.க. தேர்தல் அறிக்கைகளிலும் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த அறிக்கையை பின்பற்றும் வகையில் இனி மீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ 6,000 ஊக்கத்தொகை வங்கி கணக்கின் மூலம் வழங்கப்படும் என்றும் அந்தப் பணம் நாட்டில் உள்ள இரண்டு கோடி மீனவர்களுக்கு கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளார். ஆனால் இந்த அறிக்கை 2019 ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டுவிட்டது என்று மீன்வளத்துறை அமைக்கப்பட்டு இருக்கின்ற விவரம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இதுவரை தெரியவில்லை என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.