இனி வெங்காயம் மற்றும் பூண்டு தோலை குப்பையில் போடாதீர்கள். அதிலிருக்கும் நன்மைகளைப் பற்றி இதில் பார்ப்போம்.
ஒவ்வொரு உணவிலும் முக்கிய பொருட்கள் வெங்காயம் மற்றும் பூண்டு. இந்த இரண்டு பொருள்கள் இல்லாமல் உணவில் சுவை இருக்காது. வெங்காயம் மற்றும் பூண்டு கிட்டத்தட்ட ஒவ்வொரு வகை உணவிலும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் வெங்காயம், பூண்டு தோல் உரிக்கப்பட்ட பயன்படுகிறது. இந்த தோள்களில் பயன்களை தெரிந்துகொண்டால் அடுத்தமுறை இதனை வீணாகக் குப்பையில் எறிய மாட்டார்கள். இந்த குளிர்காலங்களில் சூப் குடிப்பது மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது.
அந்த சூழ்நிலையில் கடையில் சூப் வாங்குவதற்கு பதிலாக அதை வீட்டில் தயாரித்து குடிக்கும் நேரத்தில், வெங்காயம் மற்றும் பூண்டை தோள்களை போட்டு,சூப் தயாரித்த பிறகு அது ஒரு சல்லடை மூலம் வடிகட்டி, தோள்களை அகற்றிவிடலாம். இதை செய்வதன் மூலம் சுவை இரட்டிப்பாகும். மேலும் உடலுக்கு பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். வெங்காயத் தோல் இயற்கையான கூந்தல் சாயம் ஆகவும் செயல்படுகிறது.
அது முடியை கருமையாக்குவது மட்டுமல்லாமல் இழந்த பிரகாசத்தை மீண்டும் கொண்டு வருகிறது. இதற்காக நீங்கள் 4 முதல் 5 கப் தண்ணீரில் சில வெங்காயத்தை வேக வைக்கவேண்டும். முடிக்கு ஷாம்பு போட்ட பிறகு இந்தத் தண்ணீரால் முடியை கழுவ வேண்டும். இதனால் முடி கருமையாக மாறும். கை, கால்களில் அரிப்பு இருந்தால் வெங்காயம் பூண்டு தோள்களை தண்ணீரில் கொதிக்க வைத்து இறக்கி சிறிது நேரம், இந்த நீரில் கை, கால்களை வைக்க வேண்டும். இதனால் அரிப்பு நிவாரணம் கிடைக்கும்.