தமிழக அரசு பெண்களுக்கு நாப்கின் வழங்க 44 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.
மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் உடலில் மாதந்தோறும் சுழற்சி அடிப்படையில் நடக்கும் இயற்பியல் மாற்றம் ஆகும். இது சுமார் 3 முதல் 7 நாட்கள் வரை நடைபெறும். மாதவிடாயின் போது பெரும்பாலான பெண்கள் 50 மில்லி வரை உதிரம் இழக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் தன் சுற்றத்தை ஊக்குவிக்க பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான ‘மாதவிடாய் சுகாதார திட்டம்’ செயல்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் பள்ளிகளில், கிராமப்புறங்களில், பெண்களுக்கும் தாய்மார்களுக்கும் இலவச நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. சிறையில் உள்ள பெண்கள், மனநல காப்பகத்தில் உள்ள பெண்களுக்கு வழங்கப்படுகின்றது. ஆண்டுக்கு 60.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவும், ஆறுகோடி நாப்கின்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மாதவிடாய் கால சுகாதார திட்டத்தை 37.47 கோடி ரூபாயில் நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும் என்றும், 2020-21 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டப் பேரவை விதி எண் 110 கீழ் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இனிமேல் நகர்ப்புற அரசு பள்ளி மாணவியர்களுக்கும், உள் நோயாளி களுக்கும் இலவச நாப்கின் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.