செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ், கொடநாடு விஷயத்தை பொருத்தவரை, எடப்பாடி ஆட்சியில் இருக்கின்ற போது அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்து, ஆட்சியை கொண்டு வருவதற்கு தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்ட போது கூட, ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து,
தனித்தே 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்து… 50 ஆண்டுகால அதிமுக வரலாற்றில் 234 தொகுதிகளிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, தேர்தலில் ஆட்சியில் அமர வைத்தார்களே, அவர்கள் மறைந்த பிறகு, அம்மா அவர்கள் வாழ்ந்த வீட்டில் கொள்ளையும், கொலையும் நடக்கிறதே..
காவல்துறையை நீங்கள் வைத்திருந்தீர்களே, உங்களுக்கு ஏதாவது உண்மையாகவே மனசாட்சி அம்மா மீது உண்மையான பாசம் இருந்திருந்தால் எடப்பாடி பழனிச்சாமி அந்த நேரத்தில் 6 மாத காலத்தில் விசாரணை முடித்து குற்றவாளிகளை தண்டிதிருக்க வேண்டும், ஆனால் இவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார்.
மரியாதைக்குரிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அந்த நேரத்தில் கேட்டார்கள், எனக்கும் அவர் முதலமைச்சராக இருந்தவர், அந்த வீட்டிற்கு ஏன் பாதுகாப்பிற்கு போடவில்லை என்று… தனியார் வீடுகளுக்கு எல்லாம் பாதுகாப்பு போட முடியாது என்று சொன்னவர் தான் இந்த எடப்பாடி பழனிச்சாமி.
அம்மா அவர்களையே கட்சியினுடைய இதய தெய்வமாக சொல்லுகின்ற அண்ணா திமுக தொண்டர்களுடைய தெய்வமாக நினைக்கின்ற அம்மாவினுடைய வீட்டிற்கு காவல்துறை, முன்னாள் முதலமைச்சர் வீடு என்ற அளவிலாவது காவலுக்கு போட்டிருக்க வேண்டாமா ? அதற்கு தனியார் வீடு என்று சொன்னாரே, அதையெல்லாம் தட்டி கேட்கின்ற திறமை யோகியதை கேபி முனுசாமிக்கு இருக்கிறதா? என தெரிவித்தார்.