சென்னை ஆவடி அருகே சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்ட மணல் லாரி சிமெண்ட் சாலை உடைந்ததால் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதிக்கு கொண்டு வந்த ஓட்டுனர் வினோத் என்பவர் டீ குடிப்பதற்காக லாரியை சாலையின் ஓரமாக ஓரங்கட்டி உள்ளார்.
அப்போது லாரி நிறுத்தப்பட்டிருந்த சிமெண்ட் சாலை திடீரென உடைந்தது. இதனால் நிலைதடுமாறிய லாரி பக்கவாட்டில் சாய்ந்து விபத்திற்குள்ளானது. நல்ல வேலையாக லாரி ஓட்டுனர் கீழே குதித்தால் விபத்தில் இருந்து காயமின்றி தப்பினார்.