தென்கொரிய நாட்டு பெண்கள் எடுத்துள்ள முடிவால் ஆண்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சிங்கள் பசங்க என்று கெத்தாக சொல்லிக்கொண்டு பலர் சுற்றுவதை பார்த்திருப்போம். யாரையும் காதலிக்காமல் , திருமணம் செய்து கொள்ளாமல் சிங்களாக இருப்பதுதான் மகிழ்ச்சி என்று சமூக வலைத்தளங்களில் பதிவுகளையும் கடந்து வந்திருப்போம். ஆனால் இதே சிங்கள் என்ற வார்த்தை தென்கொரிய ஆண்களை வருத்தமடைய செய்துள்ளது என்றால் நம்பமுடிகிறதா ? திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை , குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை , ஆண்களுடன் எந்த உறவையும் கொள்ளப்போவதில்லை , சிங்களாகவே இருப்போம் இப்படி சொல்லிக் கொண்டுதான் சுற்றி வருகின்றனர் தென்கொரிய இளம்பெண்கள்.
இதனால் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஆண்கள் அவதி அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ஆண்களின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் இரண்டு பெண்கள் தான். ஜங்க்சேயங் , பிக்ஹனா எனும் இரண்டு பெண்ணியவாதிகள் சேர்ந்து தென்கொரியாவில் நோ மேரேஜ் எனும் இயக்கத்தை தொடங்கின. இந்த இயக்கத்தில் இணைய வேண்டும் என்றால் 4 கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அதாவது டேட்டிங் , திருமணம் , செக்ஸ் , குழந்தைகள் என இந்த நான்கிற்கும் நோ சொல்லும் பெண்கள் மட்டும் தான் இந்த இயக்கத்தில் இணைய முடியும்.
விளையாட்டாக தொடங்கப்பட்ட இந்த இயக்கம் தென்கொரியாவில் தற்போது பூதாகரமாகி உள்ளது. ஆரம்பத்தில் 10 , 20 பேர் இருந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 50 ஆயிரம் பெண்கள் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர். சமீபத்தில் தென் கொரிய இளம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 44% பெண்கள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளனர் . திருமணம் வேண்டாம் என அடம்பிடிக்கும் 56% பெண்கள் கூறும் காரணமும் அதிர்ச்சி ரகம்.
இது என் உடல் , என் விருப்பம் , பிரசவத்தின் உடல் வலி எனக்குத் தேவையில்லை . ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் இருப்பதைக் காட்டிலும் நான் தனிமையில் வாழ்ந்து எனது வாழ்க்கை இலட்சியத்தை அடைவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். திருமணம் செய்து கொண்டு கணவருடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. இது போன்ற பெண்களின் காரணங்களை கண்டு விழிபிதுங்கி நிற்கின்றனர் ஆண்கள் .
அத்துடன் நோ மேரேஜ் இயக்கத்தின் காரணமாக அந்நாட்டின் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரமாரியாக குறைந்து வருகிறது. இது தொடர்ந்து வந்தால் தென்கொரியா மோசமான பின் விளைவுகளை சந்திக்கலாம் என உலக அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. உலகிலேயே குறைந்த அளவு குழந்தை பிறப்பை கொண்டுள்ள தென்கொரியாவில் பெண்களின் நிலைப்பாட்டில் மாற்றம் வராதவரை எதுவும் மாறுவதற்கு வாய்ப்பில்லை என வருத்தத்துடன் கூறி வருகின்றனர் சிங்கள் ஆண்கள்.