இனி பொது இடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக வரும் ஞாயிறு முதல் திறந்தவெளியில் மக்கள் முக கவசம் அணியாமல் செல்லலாம் என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் தடுப்பூசியை தீவிரப்படுத்தியதன் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இஸ்ரேலில் சுமார் 300 க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த நாட்டில் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சர் ஜுலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்தது முககவசங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் கொரோனா தற்சமயம் குறைந்துள்ளதால் பொது இடங்களில் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மூடிய அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளில் கட்டாயம் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.