தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் காரி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் மலையாள நடிகை பார்வதி அருண் தமிழில் என்ட்ரி ஆகிறார். அதன்பிறகு பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் காரி படம் நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்ற போது, காரி பட குழுவினர் அனைவரும் விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் சசிகுமார் பேசியதாவது, எல்லோரும் என்னிடம் ஒரே மாதிரியான கிராமத்து கதையிலேயே நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள்.
நான் கிராமத்து படம் தான் பண்ணுவேன். அவர்களுக்காக நான் செய்யாமல் வேறு யார் செய்வார். என்னுடைய தயாரிப்பில் ஜல்லிக்கட்டு பற்றிய படத்தை எடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அது முடியவில்லை. ஆனால் தற்போது அந்த ஆசை லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் நிறைவேறியுள்ளது. இந்த படத்தின் மூலம் 9-வது முறையாக நான் புதிய இயக்குனரை அறிமுகப்படுத்துகிறேன். நான் நடித்த படங்களில் இதுதான் அதிக பட்ஜெட் கொண்ட படமாக இருக்கும். இந்த படத்தில் 19 வகையான ஜல்லிக்கட்டு காளைகள் பற்றி சொல்லியுள்ளோம்.
படத்தில் பல ஜல்லிக்கட்டு வீரர்கள் என்னுடன் பணிபுரிந்த போதும் சில சமயங்களில் ஜல்லிக்கட்டு காளைகளிடமிருந்து நான் மயிரிழையில் தப்பித்தேன். அதன் பிறகு ஜல்லிக்கட்டுக்கு எத்தனை தடை கேட்டு யார் வழக்கு போட்டாலும் ஜல்லிக்கட்டை யாராலும் எதுவும் செய்ய முடியாது. ஜல்லிக்கட்டு விளையாட்டை அழிக்கவே முடியாது. இந்த படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை அழிக்க நினைப்பவர்களுக்கான படமே தவிர ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்துவது போன்ற படம் கிடையாது. மேலும் இது மக்களுக்காக எடுத்த படம் என்பதால் அனைவரும் திரையரங்குகளில் வந்து தான் படத்தை பார்க்க வேண்டும் என்று கூறினார்.