செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒலிம்பியாட் போட்டி நடத்தும் போது, நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால், இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை இன்னும் சிறப்பாக நடத்தி இருப்போம், அதில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இப்போது டெக்னாலஜி வளர்ந்துள்ளது, அன்றைக்கு சாப் கேம்ஸ் வந்து சென்னையில் அம்மா அவர்கள் நடத்தினார்கள். அப்போதான் சென்னையே ஒரு ஸ்போர்ட்ஸ் சிட்டியாக மாறியது.
வேளச்சேரியில் இருக்கின்ற ஸ்விம்மிங் கூல் , நேரு ஸ்டேடியம், இன்டோர் ஸ்டேடியம், அவுட் டோர் ஸ்டேடியம் என்று கிட்டத்தட்ட எல்லா ஸ்டேடியம் உருவாக்கியது. அன்றைக்கு நரசிம்ம ராவ் பாரத பிரதமர் இருந்தார். அவர்தான் கலந்து கொண்டார்,அன்றைக்கு நானும் ஒரு அமைச்சராக 1991 – 1996இல் அம்மாவுடைய மந்திரி சபையில் இருந்தேன். இதை விட பிரதமாக பண்ணுனோம்.
அதனால் எங்களை பொறுத்தவரையில், நான் சொல்லுவது எங்க ஆட்சியில் இருந்தால் இதைவிட உலகமே பேசுகின்ற அளவுக்கு செஞ்சி இருப்போம். அந்த சாமர்த்தியம் எங்களுக்கு இருக்கிறது எத்தனை நரிகள் ஒன்று கூடினாலும் சரி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்த, புரட்சித்தலைவி எம்ஜிஆர் கட்டிக் காத்த ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கின்ற இந்த மாபெரும் இயக்கத்தை எந்த நரிகளின் தந்திரத்தாலும் அசைக்கவும் முடியாது, ஆட்டவும் முடியாது. அந்த நரிகள் உடைய தந்திரம் வேலைக்கு ஆகாது என தெரிவித்தார்.