நான்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் நிச்சயம் வெற்றிபெறும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர் O.பன்னீர் செல்வம், உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்க வேண்டிய நேரத்தில் உறுதியாக நடக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக சீமான் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார்.