Categories
மாநில செய்திகள்

என்ன நடந்தாலும்…. எனக்கு கடமை தான் முக்கியம் – நாராயணசாமி ஆய்வு…!!

புதுச்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நாராயணசாமி நேரில்  சென்று ஆய்வு செய்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர்  நாராயணசாமி தங்களுடைய பெருமையை பெரும்பான்மை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் காங்கிரஸ் அரசு நாளை சட்டப்பேரவையில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நாளை காலை முடிவை அறிவிப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாளை முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒரு சில எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து வருவதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இது எதையும் கண்டுகொள்ளாத புதுவை முதல்வர் காமராஜர் நகர் தொகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை பார்வையிட்டார். புதுச்சேரியில் நள்ளிரவு முதல் தாழ்வான பகுதி மற்றும் வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Categories

Tech |