சென்னையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ஆனது காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் அமையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசும் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள 12 கிராம மக்கள், பரந்தூரில் விமான நிலைய அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்து ஈடுபட்டு இருக்கின்றனர். இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக பாதிக்கப்படும் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களின் கருத்துக்களை கேட்டார்.
அப்போது அக்கிராம மக்கள் முதியவர்கள் என பலரும் சீமானின் காலில்விழுந்து தங்களது கிராமத்தினை காப்பாற்ற வேண்டும் என கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்களையும் கண்கலங்க செய்தது. இதை எடுத்து அவர்களுக்கு ஆறுதலுக்குரிய சீமான் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், இரண்டாவது ஏர்போர்ட் இந்த இடத்தில் அமைவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தான் காரணம் என குற்றச்சாட்டினை முன் வைத்தவர்.
அனைத்து விமானத்தையும் அரசு விற்று வருவதாகவும், அதானி துறைமுகத்தை கட்டுவது போல் ஏர்போர்டை கட்டிடலாம் எனவும், இதை நேரடியாக அதானி கட்டினால் நாம் சண்டை போடுவோம் என்பதால், அரசு கட்டி அவரிடம் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்தவர்.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் 37 குழு அமைத்துள்ளதாகவும், அடுத்து 38 குழு அமைப்பாரே தவிர வேறு எதையும் செய்ய மாட்டார் என்றும், சென்னை வானூர்தி நிலையம் சரியில்லை என்று யார் குறை கூறினார்கள் என கேள்வி எழுப்பிய அவர்,
உலகத்திலேயே மிகப்பெரிய வானூர்தி சென்னை விமான நிலையத்திற்கு வந்து சென்றுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் பிறகு ஏன் இந்த வானூர்தி நிலையம் கேள்வி எழுப்பியனார். ஏர்போர்ட் எங்கு வேண்டுமானாலும் கட்டிடலாம். எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் விவசாய நிலங்களை உருவாக்கிட முடியாது என்று உருக்கமாக பேசியவர். அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க காசு இல்லை, ஆனால் விமான நிலையம் கட்டிட காசு உள்ளது.
2028க்குள் விமான நிலையம் கட்டவில்லை என்றால், அரசுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளவர்கள், அரசு 2030ஆம் ஆண்டுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படுமே, அதற்கு என்ன திட்டம் வைத்துள்ளார்கள் என கேள்வி எழுப்பி, நான் இங்கு நான் இங்கு இருக்கும் வரை விமான நிலையம் அமைவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.